யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் மது அருந்தியவர் நேற்றைய தினம் புதன்கிழமை (10.07.25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். நகர் பகுதியை சேர்ந்த அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முழவை சந்திக்கு அருகில் உள்ள வீதியோர பூங்காவின் ஆல மரம் ஒன்றின் கீழ் இருந்து, உயிரிழந்த நபரும் வேறு நபர்களும் இணைந்து மது அருந்தி கொண்டிருந்ததை . அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவதானித்துள்ளார்கள்.  அந்நிலையில் குறித்த நபர் அவ்விடத்தில் இருந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.