Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
திருகோணமலையினை பௌத்தம் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக தடைகளை விதிக்க தமிழ் அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அவ்வகையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாhரின் நேரடி ஆய்வின் பின்னரே கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் அத்துமீறிய கட்டிடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அவை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பிரதேசசபை தலைவர் வெள்ளை தம்பி சுரேஸ்குமார் உபதலைவர் வைரவநாதன் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் நேற்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.அவ்விடத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து கட்டிடப் பணியை உடனடியாக இடைநிறுத்த உள்ளுராட்சி சபை தடை விதித்துள்ளது.
ஏற்கனவே திருக்கோணேஸ்வரம் முதல் கன்னியா வெந்நீருற்று வரையாக சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.