வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை டிரோன் மூலம் காப்பாற்றிய விவசாயிகாணொளிக் குறிப்பு, வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை டிரோன் மூலம் காப்பாற்றிய விவசாயிவெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை டிரோன் மூலம் காப்பாற்றிய விவசாயி

13 நிமிடங்களுக்கு முன்னர்

வியட்நாமில் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை விவசாயி ஒருவர் உரம் தெளிக்கப் பயன்படுத்தும் டிரோன் மூலம் காப்பாற்றினார்.

வியட்நாமின் Central Highlands பகுதியில் மழைக்காலங்களில் திடீர் வெள்ளம், ஆற்றில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகியவை அடிக்கடி நடக்கின்றன.

சில நேரங்களில் மொத்த கிராமமுமே கூட அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

கனமழை வெள்ளம் காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு