டிரம்பின் கூடுதல் வரி: யாருக்கெல்லாம் பாதிப்பு? இந்தியாவின் நிலை என்ன?காணொளிக் குறிப்பு, டிரம்பின் கூடுதல் வரியால் இந்தியாவுக்கு பாதிப்பா?டிரம்பின் கூடுதல் வரி: யாருக்கெல்லாம் பாதிப்பு? இந்தியாவின் நிலை என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இறக்குமதி மீது அதிக வரிகளை விதிப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார். முன்னதாக இதற்கான கெடு ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

அதேசமயம் ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகள் மீது விதிக்கப்படவுள்ள வரிகள் குறித்த கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யும் நிலைக்கும் நெருக்கமாக உள்ளோம் என டிரம்ப் கூறியிருந்தாலும், பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

டிரம்பின் இந்த புதிய வரிவிதிப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நாடுகள் எவை? இந்தியா பற்றி டிரம்ப் கூறியது என்ன? இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு