Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் இருந்தபோதே, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான சில திட்டங்கள் மற்றும் தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்துள்ளார்.
அது தொடர்பான மூலாதாரங்களைக் கொண்டு விசாரணைகள் முடிவடைந்துள்ளன.
இந்த தகவல் ஒரு புதிய விசாரணை பாதையை வெளிப்படுத்துகிறது.
பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதிலும், தீவிரவாதத் தாக்குதல்களுக்கான திட்டங்களைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததைக் காட்டும் பல ஆதாரங்கள் புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.