Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்களை சேகரித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவிற்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இது தொடர்பில் மிக விரைவில் எமது கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் காத்திரமான விடயங்களை எடுத்து கூறுவார்.
அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் ஒன்றினைந்த ஒரு விடயம். இவ்விடயத்தில்பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வு வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான சர்வதேச விசாரணைகள் அவசியம்
செம்மணி விவகரத்தில் நான் கூறும் அல்லது வெளிப்படுத்தும் கருத்தை எனது தலைமை ஏற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது கருத்தை நிராகரிக்கும் நிலை உருவானால் கட்சியை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் என தெரிவித்தார்.