Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழில் காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் தாயார் பனடோல் சிறப் கொடுத்துள்ளார். அந்நிலையில் குழந்தை மயக்கமடைந்துள்ளது.
அதனை அடுத்து குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.