சென்னையில் வீணாகும் உணவுக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் அரசுப் பள்ளிகாணொளிக் குறிப்பு, வீணாகும் உணவை உயிரிஎரிவாயுவாக மாற்றும் அரசுப் பள்ளிசென்னையில் வீணாகும் உணவுக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் அரசுப் பள்ளி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பெருநகர சென்னை மாநகராட்சியும், கஸ்தூரிபா நகர் குடியிருப்பு சங்கமும் இணைந்து அடையாரில் உள்ள சென்னை அரசுப்பள்ளியில் பயோ கேஸ் ப்ளாண்ட் அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் பள்ளியில் சேரும் உணவுக்கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை வீணாக்காமல், அவை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் பயோ கேஸ் ஆக உற்பத்தி செய்யப்படுகிறது.

பின்னர் அப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்திற்கு பயோ கேஸ் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மதிய உணவின் போது வழங்கப்படும் முட்டையை வேக வைக்கவும், மாலை சிற்றுண்டி தயாரிக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது. இந்த பயோகேஸ் ப்ளாட் கொண்டு நாள் ஒன்றிற்கு 75 கிலோ உணவு கழிவுகள் மூலம் 2 முதல் 3 கிலோ வரை பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளியில் உள்ள சமையலறையில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்த விவரம் காணொளியில்…

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு