Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்
கிளிநொச்சி கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில்
செம்மணி படுகொலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் செம்மணி படுகொலை சம்பந்தமாக அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரனைகளை மேற்கொள்ளபடும்
கடந்த காலங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் ரோகன விஜய வீர போன்றவர்களுடன் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்
செம்மணி பகுதியில் தோண்டப்பட்ட சிறுவர்களின் உடலங்கள் மற்றும் முதியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் என்பனவற்றின் எலும்பு கூடுகளை மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதாயின் பல வருடங்கள் ஆகும்
எனவே தற்பொழுது வருகை தந்த மனித உரிமை ஆணையாளரிடம் செம்மணி பகுதியில் அகழப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான கருவிகளை இலங்கைக்கு வழங்கி மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலுயுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்