Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உலகில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? யாரிடம் அதிகமாக உள்ளது?
பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images
படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா (இடது) மற்றும் நாகசாகி (வலது) மீது பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுகுண்டுகளை வீசியது46 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இரானின் அணுசக்தித் திட்டம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுவதற்குக் காரணமாக உள்ளது.
ஜூலை 2 அன்று, இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) இரான் ஒத்துழைப்பை இடைநிறுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார். இஸ்ரேலும் அமெரிக்காவும் ஜூன் மாதத்தில் இரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கியதற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க இந்தத் தாக்குதல்கள் அவசியம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறியுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தின என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், இந்தத் தாக்குதல்களின் விளைவுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும், அணு ஆயுத பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்ட ஐ.நா.வின் பரவல் தடை ஒப்பந்தத்திற்கும் (NPT) என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பதும் இன்னும் புரியவில்லை.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தம், அணு ஆயுதங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஒன்பது நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அறியப்படுகிறது. அவர்கள் அணு ஆயுத சக்திகளாக மாறியது எப்படி? மற்ற நாடுகளும் இப்போது அவற்றைப் பெற முடியுமா?
எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன?
பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images
படக்குறிப்பு, ஹிரோஷிமா (புகைப்படத்தில்) மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசியது மட்டுமே உலகளவில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகள்அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அறியப்படுகிறது. இவற்றில், இஸ்ரேல் மட்டுமே இதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இரண்டாம் உலகப் போரின்போது மன்ஹாட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதங்களை ரகசியமாக உருவாக்கிய பின்னர் அமெரிக்கா உலகின் முதல் அணு சக்தி நாடாக மாறியது.
ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளை வீசி, 1945ஆம் ஆண்டில், அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை, பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தியது. ஜப்பான், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி மற்றும் இத்தாலியுடன் கூட்டணி சேர்ந்திருந்தது. இந்தக் கூட்டணி, நேச நாடுகளுடன் (Allied forces) போர் புரிந்தன.
அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சில் குறைந்தது 2 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. உலகளவில், இந்த ஒரு முறை மட்டும்தான் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
“அணு ஆயுதப் போட்டியின் உண்மையான தொடக்கம் இதுதான்” என்கிறார் ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர் முனைவர் பாட்ரிசியா லூயிஸ். இந்த தாக்கம், குறிப்பாக சோவியத் யூனியனை, தாக்குதலுக்கு எதிராகத் தங்களை பாதுகாக்கவும், பிராந்திய மற்றும் உலகளவில் தங்களது அதிகாரத்தை வெளிப்படுத்தவும், தங்களுக்கே உரிய அணு ஆயுதங்களை அவசரமாக உருவாக்கவும் தூண்டியது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அதன் பிறகு என்ன நடந்தது?
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பனிப்போர் தொடங்கியது. அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் இரு தரப்புகளின் நட்பு நாடுகளுக்கும் இடையே உலகளாவிய அதிகாரப் போட்டி தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. சில நேரங்களில் இந்தப் போட்டி, அணு ஆயுத மோதலாக மாறும் அபாயமும் உருவானது.
சோவியத் யூனியன், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டுகளை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியது. 1949இல் அவர்கள் ஒரு வெற்றிகரமான அணுகுண்டு சோதனையை நடத்தினர். அப்போது, அணு ஆயுதம் வைத்திருந்த ஒரே நாடு என்ற அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அதன் பிறகு, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இன்னும் அதிகமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கின.
அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் மூன்று நாடுகள் அணுசக்தி கொண்ட நாடுகளாக மாறின. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவுடன் அணு ஆயுத மேம்பாட்டில் ஒத்துழைத்த பிரிட்டன், கடந்த 1952ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை உருவாக்கிய மூன்றாவது நாடாக மாறியது.
அதைத் தொடர்ந்து, 1960இல் பிரான்ஸ் மற்றும் 1964இல் சீனா, அணு ஆயுதங்களை வெற்றிகரமாகச் சோதித்து, அணு சக்தி நாடுகள் பட்டியலில் இணைந்தன.
மற்ற நாடுகள் அணு ஆயுத சக்திகளாக எப்போது மாறின?