Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழில் இருந்து வவுனியா சென்று இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு சென்று, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞனை தமது காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீள, புதிய பேரூந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இருவரையும் 21 வயதான இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் வவுனியா அழைத்து சென்று , மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.