Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை காவல்துறையினா அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது.
ஏ9 வீதில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை நேற்றைய தினம் துப்புரவு செய்த ஓமந்தை பொலிசார்,
குறித்த இடத்தில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும், அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக் காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில், இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே காவல்துறையினா காணியை துப்பரவு செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே காணி உரிமையாளரை அச்சுறுத்தி துப்புரவு செய்ததாகவும் தெரியவருவதோடு குறித்த காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த காணியை உரிய நபருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.