Wednesday, August 20, 2025
Home tamil news35 ஆண்டுகளின் பின் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் கொடியேற்றம்! – Global Tamil News

35 ஆண்டுகளின் பின் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் கொடியேற்றம்! – Global Tamil News

by ilankai
0 comments

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் 35 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை (30.06.25)  இடம்பெற்றது.

யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கடந்த 35 ஆண்டுகளாக கொடியேற்ற நிகழ்வு நடைபெறவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இம்முறை மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஜூலை மாதம்  23ஆம் திகதி அன்றும் மறுநாள் ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

மாவிட்டபுரம் ஆலய சூழல் யுத்தம் நிறைவுக்கு வந்து ஒரு சில ஆண்டுகளில் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் , கடந்த காலங்களில் ஆலய திருவிழா கொடியேற்றம் இன்றியே நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

banner

You may also like