Thursday, August 21, 2025
Home tamil newsயாழ்.பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் – ஆவணப்படமும் வெளியீடு! – Global Tamil News

யாழ்.பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் – ஆவணப்படமும் வெளியீடு! – Global Tamil News

by ilankai
0 comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாகுவதையோட்டி பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (29.06.25) விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாசும் கௌரவ விருந்தினராக சட்டத்தரணி மாலா சபாரத்தினமும்  கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தொடர்பான ஆவணப்படமொன்று வெளியிடப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நிஸாந்தவின் நெறியாள்கையில் நடைபெற்ற குழு விவதாத்தில் இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்தலால் டி அல்வீஸ், சட்டத்தரணி எல்.இளங்கோவன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி எர்மிசா டெகல், சட்டத்தரணி லக்ஸ்மனன் ஜெயகுமார் ஆகியோர் நேரடியாக பங்கேற்றதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய இணைய வழியில் இணைந்தார்.

banner

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன், நீதிபதிகள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

You may also like