Wednesday, August 20, 2025
Home யாழ்ப்பாணம்யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

by ilankai
0 comments

யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான 28 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 

புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இந்த இளம் குடும்பஸ்தர் கடந்த 27 ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 மறுநாள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

banner

உயிரிழந்தவர் கடந்த ஐந்து மாதங்களாக ஊசி மூலம் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

You may also like