Wednesday, August 20, 2025
Home யாழ்ப்பாணம்நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன்

நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன்

by ilankai
0 comments

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவாகியுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை நெடுந்தீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி  சார்பில் முன்மொழியப்பட்ட சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவானார்.

உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவானார்.

banner

13 உறுப்பினர்களை கொண்ட நெடுந்தீவு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like