Wednesday, August 20, 2025
Home பிபிசிதமிழிலிருந்துதெலங்கானா: ஹைதராபாத் அருகே தொழிற்சாலையில் மிகப்பெரிய உலை வெடிப்பு – BBC News தமிழ்

தெலங்கானா: ஹைதராபாத் அருகே தொழிற்சாலையில் மிகப்பெரிய உலை வெடிப்பு – BBC News தமிழ்

by ilankai
0 comments

தெலங்கானா: ரசாயன உலையில் வெடிப்பு – தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பாசமிலரம் தொழிற்பேட்டையில் உலை வெடித்தது.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாசமிலரம் தொழிற்பேட்டையில் ஒரு உலை வெடித்ததைத் தொடர்ந்து அங்குப் பெரிய அளவிலான தீ ஏற்பட்டது.

banner

அங்குள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று மாநில சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்ஹா தெரிவித்தார்.

இந்த வெடிப்பு பெரும் தீயை ஏற்படுத்தியது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, வெடிப்பின் சக்தியால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டதாக சில தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.இடிந்து விழுந்த கட்டடம்

வெடிப்பின் தீவிரத்தால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டதாக சில தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

உலை வெடிப்பு மற்றும் பெரும் தீ விபத்து காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் ரசாயன வாசனையும் புகையும் பரவியது.

இதனால் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.

பாசமிலரம் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய தொழிலாளர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

(இந்த அண்மைச் செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like