“மழை போல விழும் குண்டுகள்” – வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள்”மழை போல விழும் குண்டுகள்” – வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்கள் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறுகின்றனர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

இந்த வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜபாலியாவில் (Jabalia) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்ததாகவும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும், குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் வடக்கு காஸா பகுதியிலிருந்து வெளியேறும் போதும் தாக்குதல் தொடர்ந்ததாகத் தெரிவித்தனர்.

அதே சமயம், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்ததாக ராயிட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

இதற்கிடையே காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. தற்போது வரை காஸாவில் 56,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு