Tuesday, August 19, 2025
Home tamil newsசெம்மணி மனித புதைகுழியில் மேலும் மனித எழும்புக் கூடுகள்! – Global Tamil News

செம்மணி மனித புதைகுழியில் மேலும் மனித எழும்புக் கூடுகள்! – Global Tamil News

by ilankai
0 comments

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாள் பணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய  அகழ்வு பணிகளின் போது மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் 27 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

banner

அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண்ணை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like