Thursday, August 21, 2025
Home கொழும்புசிராந்தி மற்றும் மகன்மார் அடுத்து கைது ?

சிராந்தி மற்றும் மகன்மார் அடுத்து கைது ?

by ilankai
0 comments

மகிந்த குடும்பத்தின் சிராந்தி மற்றும் மகன்மார் அடுத்து கைது செய்யப்பட்டு சிறை செல்லலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான பிரச்சாரம் மற்றும் நற்பெயரைப் களங்கப்படுத்துவதன் செய்வதன் மூலம் அதன் தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் மரியாதைக்குரிய சமயத் தலைவர்களை அரசியல் சர்ச்சைகளில் இழுப்பதாகவும்  நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மகாநாயக்க தேரர்களின் உதவியை நாடியதாகக் கூறும் அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. 

பொதுமக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாமல் தனது பதிவை முடித்தார். தேசிய மக்கள் சக்தி கட்சி அதன் நிர்வாகத்தின் மீது அதிகரித்து வரும் விமர்சனங்களால் “அவநம்பிக்கையான மற்றும் நேர்மையற்ற” தந்திரோபாயங்களை நாடுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

You may also like