சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம், போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்” எனும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனல்தினர் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்திற்கு சங்கானை பிரதேச செயலகத்தினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினர், மானிப்பாய் பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸார், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.