இரானின் அணு சக்தி கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் குறைவானதா? – கசியவிடப்பட்ட உளவுத் தகவல்கள்காணொளிக் குறிப்பு, இரான் – இஸ்ரேல் – அமெரிக்கா முத்தரப்பு மோதல்: என்ன நடந்தது?இரானின் அணு சக்தி கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் குறைவானதா? – கசியவிடப்பட்ட உளவுத் தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அற்புதமான ராணுவ வெற்றி என டிரம்ப் குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடுகள் கசிந்துள்ளன.

தாக்குதலுக்கு பின்னரும் இரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் “அப்படியே” இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இரானில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது என்ன? டிரம்ப் நிர்வாகம் இது தொடர்பாக தெரிவித்தது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு