Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சஜின் வாஸ் குணவர்தன 2010 – 2012 காலப்பகுதிகளில் அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சஜின் வாஸ் குணவர்தன இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இதனை அடுத்து நீதவான் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.