Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நூறாண்டுகளில் தோன்றாத தலைசிறந்த பந்து வீச்சாளர் – பும்ராவின் மாய வேகம் பேட்டர்களை தடுமாறச் செய்வது எப்படி?
பட மூலாதாரம், Alex Davidson/Getty Images
எழுதியவர், ஸ்டீவென் ஃபின் பதவி, பிபிசி கிரிக்கெட் கட்டுரையாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா எல்லா காலத்திலும் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கூற்றை நிராகரிப்பது என்பது உண்மையிலேயே கடினமாகி வருகிறது.
ஒவ்வொரு முறை ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும்போதும் அது, அந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹெடிங்லியில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்டில் நாம் பார்க்கும் அவரது செயல்பாடுகளை விட அவரின் திறமை மிகவும் மேம்பட்டது.
இங்கிலாந்துடனான போட்டியில், முதல் இன்னிங்ஸில் பும்ரா 83 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதோடு அவரது பந்துவீச்சில் மூன்று கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். மேலும், பும்ராவின் பந்துவீச்சில் ஹாரி புரூக் அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டாலும், அது நோ-பால் ஆகிவிட்டது.
பும்ரா கையில் பந்து கிடைக்கும் போதெல்லாம் அது பாக்ஸ் ஆஃபிஸிலிருந்து திரைப்படம் பார்ப்பது போல தோன்றுகிறது. ஒவ்வொரு பந்திலும் ஏதோ நடப்பது போல் உணர்ந்தேன். மறு அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்களை அவர்கள் வேறேதோ விளையாட்டை விளையாடுவது போல நினைக்க வைத்துவிடுகிறார் பும்ரா.
உலகின் சிறந்த வீரர்கள் கூட பும்ராவின் பந்துவீச்சில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். சுழலும் அவரது கைகள், மணிக்கட்டின் ஓர் அசைவு, பும்ராவின் கையில் இருந்து பந்து வெளியேறுவதை பேட்ஸ்மேன் அறியும் முன்பே அது அவரை தாக்கிவிடுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட்டிருந்தால், அவர் அதிகபட்சம் இரண்டு பந்துகளில் என்னை அவுட் ஆக்கிவிடுவார். அவரால் ஒரே ஓவரில் பெளன்சர், யார்க்கர், ஸ்விங், மெதுவாக என பந்து வீச முடியும். பும்ரா பந்து வீசும்போது பந்தைப் பார்ப்பது என்பதே கடினமானது என்பதால், அவர் நேரடியாக இரண்டாவது விருப்பத்திற்குச் செல்வார் என நம்புகிறேன். என்னைப் போன்ற ஒரு கீழ்வரிசை பேட்ஸ்மேனுக்கு அவர் அபாயகரமானவர் என்றே சொல்வேன்.
பட மூலாதாரம், George Wood/Getty Images
வித்தியாசமான செயல்களைக் செய்யும் பந்து வீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் “புரிந்துக்கொள்வது கடினம்” என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கலாம். கடைசி விநாடி வரை பந்தை பேட்ஸ்மேனின் பார்வையில் இருந்து மறைக்கும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கொடூரமானது.
பும்ராவைப் பொறுத்தவரை, பந்து அவரது தனித்துவமான லோட்-அப் பாயிண்டில் தொடங்குகிறது. ஒரு கடிகாரத்தையும், பும்ராவின் பந்துவீச்சையும் இணைத்து கற்பனை செய்து பாருங்கள். அவரது முழுமையாக நேராக்கப்பட்ட கை, இரண்டாவது எண்ணை சுட்டிக்காட்டுகிறது. பின்னர் அவரது கை, விரைவாக வளைந்து இறங்குகிறது, ஆனால் பந்து வீச வரும்போது, அவரது முழங்கை அதிகமாக நீட்டப்படுகிறது. இங்கிருந்துதான் அவர் தனது வேகத்தை ஓரளவு பெறுகிறார், பந்து அவரது முழங்கைக்குப் பின்னால் மறைந்துவிடும் அந்த சமயத்தில் பந்தை பேட்டரால் பார்க்க முடியாது.
பின்னர் பும்ரா தனது மணிக்கட்டை அசைத்து, எந்தவிதமாகவும் பந்து வீசத் தயாராக இருக்கிறார். இது ஒரு கவண் போன்றது. கடைசி மில்லி விநாடியில், பந்தானது பேட்ஸ்மேனின் பார்வைக்கு வரும்போது, மணிக்கு 90 மைல் வேகத்தில் பறந்துவருகிறது.
பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும், பும்ராவுக்கு ஒரு சாதகமாகவும் இருப்பது பந்து வீசும் அவரது ரிலீஸ் பாயிண்ட் தான். வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரை விடவும் பும்ரா, பேட்ஸ்மேனுக்கு அருகில் இருந்து பந்தை வீசுகிறார்.
பட மூலாதாரம், Clive Mason/Getty Images
ஒரு வேகப்பந்து வீச்சாளரை அருகிலிருந்து பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் கை, முன் பாதத்திற்கு நேராக மேலே இருக்கும்போது பந்தை விடுவிப்பதை பார்த்திருக்கலாம். பும்ரா எப்படியோ தனது கையை, முன் பாதத்திலிருந்து சுமார் 40 செ.மீ முன்னால் கொண்டு வந்துவிடுகிறார். இதனால் அவருக்கும் பேட்டருக்கும் இடையிலான தூரம் குறைகிறது, இதனால் எதிர்வினையாற்றுவதற்கு பேட்டருக்கு கிடைக்கும் நேரம் குறைகிறது.
வேகமாக பந்து வீசும் ஒருவருக்கு பும்ரா பந்து வீசும் விதம் பொருந்தாது. பும்ரா எடுத்து வைக்கும் காலடிகள் சரளமானதாக இருக்காது, குறுகிய மற்றும் தடுமாறும் அடிகளாக இருக்கும். இதைப் பார்த்தால் அவரது பந்துவீசும் வேகம் புயலைப் போல் துரிதமானதாக இருக்கும் என்பதற்கான எந்தவித அறிகுறியும் இருக்காது.
ஒரு பேட்ஸ்மேன், பும்ராவின் பந்துவீச்சை எத்தனை மணி நேரம் பார்த்து, அவதானித்து, புரிந்துக் கொண்டிருந்தாலும், களத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்படுவார். பும்ராவின் பந்து எந்தவிதமானதாக இருக்கும் என்பதை யாரும் கணித்துவிடமுடியாது. கையின் பாதை மாறாது, விரலின் நிலை மாறாது. எந்தவிதமான பந்து என்பதை கணிக்கமுடியாமல், தான் எவ்வித பந்தை எதிர்கொள்ளப்போகிறோம் என்று தெரியாமலேயே பேட்ஸ்மேன் ‘பேட்’ ஆட தயாராக இருக்க வேண்டும்.
ஒரு பந்து வீச்சாளரை விவரிக்க “beyond the perpendicular” என்ற சொற்றொடர் பயன்படுத்துவதை கேட்டிருக்கலாம். பந்துவீச்சையும் ஒரு கடிகாரத்தையும் வைத்து ஒரு கற்பனை செய்து பார்ப்போம்.
“ஓவர்-தி-டாப் ஆக்ஷன்” ரக பந்துவீச்சாளர்கள், தங்களின் தலைக்கு மேல், சரியாக, கடிகாரத்தில் எண் 12 இருக்கும் இடத்திற்கு நேராக கைகளை வைத்து பந்து வீசினால் எப்படி இருக்குமோ அப்படி வீசுவார்கள்.
‘ரவுண்ட்-ஆர்ம்’ பந்து வீச்சாளர்கள் கடிகாரத்தில் எண் 1 அல்லது 2 இருக்கும் இடத்தில் இருந்து பந்து வீசுவது போல் இருக்கும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் “beyond the perpendicular” என்ற நிலையில் பந்து வீசினால், அது கடிகாரத்தின் 11 ஆம் எண் இருப்பது போன்ற இடத்திலிருந்து வருகிறது. அதாவது கோணம் வலது கை பந்து வீச்சாளருக்கு வருவது போலவே இருக்கும். இதனால் பேட்ஸ்மேன் தேவையில்லாத பந்துகளில் விளையாட வேண்டியிருக்கும்.
இதற்கு ஒரு உதாரணம், ஜோ ரூட்டுக்கு எதிராக பும்ரா பெற்ற வெற்றியாகும், டெஸ்ட் கிரிக்கெட்டில், ஜோ ரூட்டை 10 முறை பும்ரா அவுட்டாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே ஜோ ரூட்டை அதிகமாக அவுட்டாக்கியுள்ளார்.
இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸைப் போலவே, ஜோ ரூட்டுக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு அப்பால் உள்ள பந்துகளாக பும்ரா போடுகிறார், பந்தை விளையாடத் தேர்வுசெய்தவுடன் கடைசி விநாடியில் அதை மாற்றி விடுகிறார், 2021 இல் அவர்களின் சண்டைகளைப் போலவே பந்துவீச்சும் தொடர்கிறது.
பும்ராவின் பந்துவீச்சில், தொழில்நுட்ப கூறுகளைத் தவிர, இவ்வளவு சீராக போட்டிகளைப் பாதிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் வரலாற்றில் இருந்ததில்லை என்றே நான் நினைக்கிறேன்.
ஒரு கணினியைப் போலவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தேவையானதை தொடர்ந்து கணக்கிட்டு பும்ரா செய்கிறார், அத்துடன் அவர் செய்ய விரும்புவதை ஏறக்குறைய சரியாகவும் செயல்படுத்திவிடுகிறார்.
ஜஸ்பிரித் பும்ராவின் பல்துறைத்திறனுக்கு உதாரணமாக, சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்தது 500 பந்துகளை வீசிய முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில், பும்ராவின் 6.27 என்ற எகானமி ரன்ரேட் சிறந்தது.
அதே நேரத்தில், டெஸ்ட் வரலாற்றில் பும்ரா குறைந்தபட்சம் 200 விக்கெட்டுகளுடன் சிறந்த பந்துவீச்சு சராசரியையும் கொண்டுள்ளார். பும்ரா 19.33 உடன், 20.94 உடன் இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் மால்கம் மார்ஷலை விட மைல்கள் முன்னால் உள்ளார்.
வேறுவிதமாக சொல்வதென்றால், பும்ராவை விட குறைந்த சராசரியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் முதலாம் உலகப் போருக்கு முன்பு விளையாடியவர்கள் தான்.
பட மூலாதாரம், Visionhaus/Getty Images
டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மேலும் விரிவடைந்து வரும் சூழலில், பந்து வீச்சாளர்களுக்கு மாறுபட்ட திறன்கள் தேவைப்படும் நிலை உருவாகிறது. பும்ரா இரண்டிலும் சிறந்தவர் என்பது அவருக்கு கூடுதல் பலம்.
விளையாட்டைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய பும்ரா, இந்தியாவின் டெஸ்ட் கேப்டனுக்கான விருப்பங்களில் முதல் தேர்வாக இருந்திருப்பார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவதற்கு அவர் சிரமப்பட்டிருப்பார். அணிக்கு அது நியாயமாக இல்லை என்று உணர்ந்ததால், அந்தப் பணியைத் தொடர வேண்டாம் என்று அவரே முடிவு செய்தார்.
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் சகாப்தத்தில் இருப்பது நமது அதிர்ஷ்டம். அண்மையில் சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ககிசோ ரபாடா, கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் உட்பட பலரை சொல்லலாம்.
இவர்கள் அனைவரிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார் என்ற பாராட்டுக்கு ஜஸ்பிரித் பும்ரா தகுந்தவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு