Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் இன்று (23) காலை 8.30 மணிக்கு நீதி அமைச்சரின் தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து வந்த அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்கள், ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
சிறைச்சாலைகளின் தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
சிறைச்சாலைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அங்கு வந்திருந்த அதிகாரிகளுக்கு விளக்கினார்.