இஸ்ரேல் மீது தாக்குதலை தொடரும் இரான் – பாதிப்புகள் என்ன?காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய இரான்: பாதிப்பு என்ன?இஸ்ரேல் மீது தாக்குதலை தொடரும் இரான் – பாதிப்புகள் என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இரானுக்கு எச்சரிக்கையும் விடுத்து வந்தார். அமெரிக்கா இந்த மோதலில் தலையிடும் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றன.

இந்நிலையில் இரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிர்வினையாக இன்று பதில் தாக்குதலை நடத்தியுள்ளது இரான். இன்று இரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் கட்டடங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன.

இஸ்ரேலின் பல இடங்களை இரான் தாக்கியது. இன்று மட்டும் குறைந்தது 16 பேர் காயம் என இஸ்ரேல் கூறுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு