Wednesday, August 20, 2025
Home யாழ்ப்பாணம்வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு

by ilankai
0 comments

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு செய்யப்பட்டார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் 

 பாபு தேவ நந்தினி தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 8 பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 4 பேரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் 2 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 1 வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் 2 பேரும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர் .

banner

இந்நிலையில் தவிசாளர் தெரிவுக்கு கந்தையா யசீதனின் பெயரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதனுடயை பெயர்களும் முன்மொழியபட்டது  

அதனை தொடர்ந்து நடாத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கந்தையா யசீதனுக்கு தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிடிபி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசு கட்சியின் 13வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் . 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் அளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி 6 வாக்குகளை கொண்டிருந்த பொழுதிலும் நடுநிலை வகித்தது .

இதேவேளை உப தவிசாளராக பேரின்ப நாயகம் சுபாகரின் பெயர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பிலும் மற்றும் தர்மகுலசிங்கம் உதயகுமாரின் பெயர் சங்கு சைக்கிள் கூட்டணியின் சார்பில் முன்மொழியப்பட்டது  

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பேரின்ப நாயகம் சுபாகர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

You may also like