Wednesday, August 20, 2025
Home tamil newsவன்னியின் இசைத் தென்றல் நிகழ்ச்சி கிளிநொச்சியில்! – Global Tamil News

வன்னியின் இசைத் தென்றல் நிகழ்ச்சி கிளிநொச்சியில்! – Global Tamil News

by ilankai
0 comments

கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்து கொள்ளவுள்ள மாபெரும் இசை கொண்டாட்டம் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கையின் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்” இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஈழத்தின் புகழ் பூத்த இசைக்குழுவான சாந்தன் இசைக்குழுவின் இசையில் தென்னிந்திய பிரபல பாடகர்களான  சத்தியன் , திவாகர் , பத்மலதா ஆகியோர் பாடல்களை பாடவுள்ளனர். அவர்களுடன் ஈழத்தின் புகழ் பூத்த பாடகர்களான கோகுலன் உள்ளிட்டவர்களும் பாடல்களை பாடி இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவுள்ளனர்.

குறித்த இசை நிகழ்வு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்தி , இசையினால் அவர்களை மகிழ்விக்கும் நோக்குடன் இலவசமாக இசை நிகழ்வினை நடாத்துவதாகவும் , இசை கலைஞர்களை கௌரப்படுத்தவுள்ளதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளரான பிரபாலினி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

banner

You may also like