Thursday, August 21, 2025
Home பிரித்தானியாஇங்கிலாந்தில் இரண்டு இராணுவ விமானங்களை சேதப்படுத்திய பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்

இங்கிலாந்தில் இரண்டு இராணுவ விமானங்களை சேதப்படுத்திய பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்

by ilankai
0 comments

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் புகுந்து இரண்டு விமானங்களைச் சேதப்படுத்தியதாக பாலஸ்தீனிய ஆரவு ஆர்வலர்கள் கூறியுள்ளதோடு காணொளியையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் பிரைஸ் நார்டன் தளத்திற்குள் இரண்டு ஆர்வலர்கள் நுழைந்து, எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாயேஜர் விமானங்களை சேதப்படுத்தியதாக பாலஸ்தீன நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

அவர்களது அறிக்கையில் விமாங்களை அடைய அவர்கள் மின்சாரக் ஸ்கூட்டர்களில் பயணித்ததாகவும் விமானங்களை கம்பிகள் கொண்டு தேசப்படுத்தியதாகவும், விமானங்களிலும் மற்றும் ஓடுபாதைகளிலும் சிவப்பு நிற வண்ணங்கள் தெளித்ததாகவும் அக்குழு அறிக்கையில் தெரிவித்தது.

இஸ்ரேலிய அரசாங்கத்தை பகிரங்கமாகக் கண்டித்துக்கொண்டு மறுபுறம் இஸ்ரேலுக்கு ஆயுத தளபாடங்கள அனுப்புகிறது. காசா மீது இங்கிலாந்திலன் வேவு விமானங்களை பறக்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

இரண்டு ஆர்வலர்களும் தளத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்த்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்தோ அல்லது காவல்துறையிடமிருந்தோ உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

You may also like