‘மூக்கின் அளவைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது’ – தனித்துவமான பெரிய மூக்கு கொண்ட பூனைகாணொளிக் குறிப்பு, பார்னி பப்பிள்: தனித்துவமான பெரிய மூக்கு கொண்ட பூனை’மூக்கின் அளவைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது’ – தனித்துவமான பெரிய மூக்கு கொண்ட பூனை

45 நிமிடங்களுக்கு முன்னர்

பெரிய மூக்கு கொண்ட பூனை இது. இதன் பெயர் பார்னி பப்பிள். வடக்கு அயர்லாந்தின் ஒரு பூனை மீட்பு தொண்டு நிறுவனத்தில் பார்னி வசிக்கிறது.

பூனையின் மூக்கின் அளவைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது என்று கூறுகிறார் ‘ரெஸ்கியூ கேட்ஸ் என்ஐ’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லின்சி ஜோன்ஸ்.

“பூனை முற்றிலும் நலமாக இருப்பதாகத் தெரிகிறது. மிகவும் நன்றாக சாப்பிடுகிறது. அதன் மூக்கிலிருந்து திரவம் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் புற்றுநோய் அறிகுறி எதுவும் இல்லை.” என்கிறார் அவர்.

“கிரிப்டோகாக்கஸ் தொற்று என்ற ஒன்று உள்ளது. அதற்காக மருந்து அளிக்கப்படுகிறது. ஏழு நாட்கள் மருந்து கொடுப்போம், பிறகு ஏழு நாட்கள் நிறுத்திவைப்போம். வித்தியாசம் தெரிகிறது. இது மிகவும் அமைதியான, ஒரு சிறு பூனை. தனித்துவமான குணமுடையது.” என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு