அமெரிக்கா இரானை தாக்குமா? – டிரம்ப் சொன்ன பதில்அமெரிக்கா இரானை தாக்குமா? – டிரம்ப் சொன்ன பதில்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் -இரான் இடையே மோதல் நடந்துவரும் நிலையில் இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், ”என்ன செய்யப்போகிறேன் என்பது உங்களுக்கு தெரியாது.நான் செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது. இரானுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியும்.” என்றார்.

மேலும், ”இந்த மரணமும் அழிவும் நடக்கும் முன்னால் ஏன் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை? என அவர்களிடம் கேட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அப்போது உங்கள் நாடும் இருந்திருக்கும். இதைப் பார்ப்பதற்கே வருத்தமாக இருக்கிறது. இது போன்ற ஒன்றைப் பார்த்ததேயில்லை. அனைவரின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. நான் அப்படி நினைக்கவில்லை. அவர்களிடம் ஏதாவது செய்ய வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனச் சொன்னேன். கடைசியில் இறுதி நிமிடத்தில் வேண்டாம் எனச் சொன்னார்கள். அதன்பின் தாக்கப்பட்டனர்.” என்றார்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு