Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Reuters
50 நிமிடங்களுக்கு முன்னர்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எதிரெதிர் துருவங்களாக உள்ள இஸ்ரேலும் இரானும் கடந்த சில நாட்களாக ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு என்ன காரணம்? இரு நாடுகளுக்கும் மோதல் நீடிப்பது ஏன்? இரு நாடுகளின் பலம் என்ன? என்பது உள்ளிட்ட சில அடிப்படை கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விளக்கம் அளிக்கிறது.
நண்பர்கள் எதிரிகளானது எப்படி?
1979-ம் ஆண்டு இரானில் இஸ்லாமிய புரட்சி நடைபெறும் வரை இஸ்ரேலும் இரானும் நட்பு நாடுகளாக இருந்தன. அதன் பின் இரானில் அமைந்த அரசு, இஸ்ரேலை எதிர்ப்பதையே தனது சிந்தாந்தத்தின் முக்கியப் பகுதியாக கருதியது. இஸ்ரேலின் இருப்பையே இரான் அங்கீகரிக்கவில்லை. இதனால், இஸ்ரேல், இரானை தனது இருப்புக்கான அச்சுறுத்தலாக பார்க்கிறது.
லெபனிய ஷியா பிரிவு ஆயுதக்குழு ஹெஸ்புலா, காஸாவில் ஹமாஸ் மற்றும் ஏமனில் ஹூதி உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு இரான் வழங்கும் ஆதரவை தனக்கான அச்சுறுதலாக இஸ்ரேல் நம்புகிறது.
சமீபத்திய மோதல்கள் எதனால் உருவாயின?
இந்த பகை, 2024-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. ஹெஸ்புலா தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாக இரான் கூறியது. இதன் பிறகு இஸ்ரேல், இரானின் ராணுவ இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
ஜூன்13-ம் தேதி இரானின் அணுசக்தி கட்டமைப்பு மற்றும் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன் பின், இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இரான் ஏவுகணை இஸ்ரேலை தாக்கியது உண்மையா?
இரு நாடுகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் மோதலில் இரான் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தாலும், இரானின் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இரான் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் ஹைஃபா நகரில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹொசைன் சலாமிசமீபத்திய மோதலில் கொல்லப்பட்ட இரான் தலைவர்கள் யார்?
இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில், இரானின் பல உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரான் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, அதன் உளவுப்பிரிவுத் தலைவர் முகமது கசேமி, இரானின் ஆயுதப்படையின் தலைவர் முகமது பகேரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட், இரானின் அணு விஞ்ஞானிகளின் இருப்பிடத்தை கண்டறிய உதவியுள்ளது. தனது நாட்டின் 6 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாக இரான் கூறுகிறது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, டெல் அவிவ் நகரில் இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இரான் யார் ஆட்சியின் கீழ் உள்ளது?
இரானில் நடைபெற்றுக் கொண்டிருந்த மன்னராட்சி தூக்கி எறியப்பட்டு 1979-ம் ஆண்டு இரான் ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாக நிறுவப்பட்டது. இரானின் தலைவர் சுப்ரீம் லீடர் எனப்படும் அந்நாட்டின் உச்சத் தலைவர் ஆவார். நீதித்துறை, ராணுவம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான தலைவரை நியமிக்கும் அதிகாரம் அவருக்கே உண்டு. அதிபர் தேர்வை உறுதி செய்வதும் அவரே.
அன்றாட அரசு விவகாரங்களை நிர்வகிப்பது அதிபராக இருந்தாலும், உச்சத் தலைவரை விட அவருக்கான அதிகாரம், குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்களில் குறைவு. தற்போது ஆயதுல்லா அலி காமனெயி உச்சத்தலைவராக உள்ளார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனேயிஇரானிடம் எவ்வளவு எண்ணெய் வளம் உள்ளது?
2023-ம் ஆண்டு தரவுகள் படி உலகின் நான்காவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு இரான் ஆகும். உலகில் கண்டறியப்பட்டுள்ள எண்ணெய் வளங்களில் அதிகம் கொண்ட மூன்றாவது நாடு இரான். 2023-ல் மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் வளங்களில் 24%, மற்றும் உலகில் உள்ளவற்றில் 12% இரானிடம் இருந்தது.
எனினும் அதன் கச்சா எண்ணெய் வர்த்தகம் பல்வேறு சர்வதேச தடைகளால், குறிப்பாக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகளால் இரான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மோதல்களால் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் இருந்ததை விட கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
இரான் மற்றும் இஸ்ரேலின் ஆயுத பலம் என்ன?
இஸ்ரேலை விட பூகோள ரீதியாக இரான் பெரிது. இரான் கிட்டத்தட்ட 90 மில்லியன் மக்கள் தொகை கொண்டது, இது இஸ்ரேலின் மக்கள் தொகையை விட பத்து மடங்கு அதிகம்.
இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தயாரிப்பில் அதிக முதலீடு செய்துள்ளது. தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும் போர் விமானங்களையும் மேம்படுத்தியுள்ளது. ரஷ்யா அவற்றை மேம்படுத்துவதில் உதவுவதாக நம்பப்படுகிறது. Su-35 போர் விமானங்களையும் S-300 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளையும் இரானுக்கு ரஷ்யா வழங்கியுள்ளது. யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இரான் வழங்கிய ராணுவ உதவிக்காக ரஷ்யா இந்த ஆதரவை அளிப்பதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேல் உலகின் மேம்பட்ட விமானப்படைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவன (IISS) அறிக்கையின் படி, இஸ்ரேலிடம் F-15, F-16, மற்றும் ஐந்தாம் தலைமுறை F-35 ஸ்டெல்த் ஜெட் போர் விமானம் ஆகியவையும் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, F-35 ஸ்டெல்த் ஜெட் போர் விமானம் (கோப்புப் படம்)இரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளனவா?
இரானிடம் அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால் ஒரு அணுசக்தி திட்டம் உள்ளது. அது குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. 2025-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, இரானிடம் 60% செறிவூட்டப்பட்ட 275 கிலோ யுரேனியம் உள்ளது என்று சர்வதேச அணு சக்தி அமைப்பு ( IAEA) கூறுகிறது.
இதை மேலும் செறிவூட்டினால் பல அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் 6 முதல் 18 மாத காலத்தில் இரானால் அணு ஆயுதத்தை தயாரித்து விட முடியும் என்றும் கணிக்கப்படுகிறது.
இரானுக்கும் இஸ்ரேலுக்குமான தூரம் எவ்வளவு?
இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் சுமார் 1000 கி.மீ ஆகும். இரு நாடுகளுக்கும் இடையே ஜோர்டான், இராக், துருக்கி போன்ற நாடுகள் உள்ளன.
டெல் அவிவ் மற்றும் டெஹ்ரான் இடையிலான தூரம் சுமார் 1600 கி.மீ ஆகும். இஸ்ரேலின் போர் விமானங்கள் ஒரு முறை எரிபொருள் நிரப்பிவிட்டு செல்லும் அதிகபட்ச தூரத்தை விட இந்த தூரம் அதிகமாகும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரானில் பின்பற்றப்படும் சமயம் எது?
இரான் ஷியா பிரிவை பின்பற்றும் இஸ்லாமிய நாடாகும். ட்வெல்வர் ஜாஃபரி ஷியா இஸ்லாம் ( Twelver Ja’afari Shia Islam) இரானின் அதிகாரப்பூர்வ மதம் என்று இரானின் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. உலகின் ஷியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்று இரான்.
பண்டைய உலகின் பேரரசுகளில் ஒன்றான இரான் தனக்கான தனித்துவமான கலாசார அடையாளத்தை மொழி மற்றும் மதத்தின் மூலம் தக்க வைத்து வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு