வரலாற்றில் முதல்தடவையாக ஜக்கிய தேசிய கட்சி வசமிருந்த கொழும்பு மாநகரசபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இதனிடையே மலையகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், கலந்துரையாடல்களின்படி, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் தெனியாய கொட்டபொல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவு வழங்கப்படும் என்று ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

முன்னதாக ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களை மீண்டும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கையின்படி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 4 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் பதவியை மட்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_க்கும், துணைத் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்திக்கும் வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.