Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பெரும்பிரச்சாரங்களுடன் விடுவிக்கப்பட்ட பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல முழுமையான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழமையான நடைமுறையில்; இராணுவ சோதனைச்சாவடிகளில் பதிவு நடவடிக்கை மேற்கொண்ட பின்னரே வெள்ளிக்கிழமை மற்றும் விசேட நாட்களில் பூசைகள் செய்வதாயின் அனுமதி பெற்றுச் செல்லலாம். ஆதனை விடுத்து கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக எவ்வேளையும் செல்லுவதற்கான அனுமதி இன்னமும் பக்தர்களிற்கு வழங்கப்படவில்லையென மீள்குடியேற்ற குழு அறிவித்துள்ளது.
முன்னதாக மக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அறிவித்திருந்தார்.
மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், நாடாளுமன்;ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் ஆலயத்திற்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்ததாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.