Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரானுக்குள் இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவுகளை காட்டும் படங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.33 நிமிடங்களுக்கு முன்னர்
வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகாலை இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்தது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டடத்துக்கு வெளியே ஒரு இரானியர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஹ்ரானில் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானில் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடந்த மீட்பு பணி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சேதமடைந்த ஒரு கட்டடம்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூன் 13 அதிகாலை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் படங்களுடன் கூடிய ஒரு போஸ்டர், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஹ்ரானில் தாக்குதல்களில் சேதமடைந்த கட்டடங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரான் மீதான சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயின் பதிவு செய்யப்பட்ட காணொளியை தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு இரானியர். (இடம்: டெஹ்ரானில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு)இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார்.
இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டடங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரான் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த கட்டடங்களைப் பார்க்கும் இஸ்ரேலியர்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் பதிலடி தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக டெஹ்ரானின் வீதிகளில் கூடிய மக்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெஹ்ரானின் வீதியில் இதைக் கொண்டாடும் மக்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரான் முழுவதும் பல இலக்குகளைத் தாக்கியுள்ள இஸ்ரேல், இரானின் நடான்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் ஆலையை சேதப்படுத்தியுள்ளது. ஆனால் இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், புஷேர் போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை உற்பத்தி செய்ய யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் வலியுறுத்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஹ்ரானின் என்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு போஸ்டர்.இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.
இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன.
இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு