Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
திருகோணமலையில் தமிழ் மக்களை விரட்டியடிப்பதில் முனைப்பு காண்பித்து வரும் சிங்கள பேரினவாதம் தற்போது முஸ்லீம்களை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது.மரணித்த முஸ்லீம் ஒருவரது உடல நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் பதற்றமான சூழ்நிலை தோன்றியிருந்தது. திருகோணமலை குச்சவெளி புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் இன்று ஆண் ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உடலத்தை நல்லடக்கம் செய்வதற்கு மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் நல்லடக்கம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அடக்கத்திற்கு எதிராக புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியினால் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரி புல்மோட்டை காவல் நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி மயான காணி “பூஜா பூமி” என கூறிவருகின்றார்.
எனினும் தடைகளிற்கு எதிராக கொழும்பில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து நல்லடக்கத்திற்கான அனுமதி இறுதி நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது.