பட மூலாதாரம், BBC/Tejas Vaidya

படக்குறிப்பு, வியாழக்கிழமை (ஜூன் 12), ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.40 நிமிடங்களுக்கு முன்னர்

வியாழக்கிழமை (ஜூன் 12), ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர்.

பயணிகள் குறித்த தகவல்களை அவர்களின் குடும்பங்கள் தெரிந்துகொள்ள 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர உதவி எண்ணை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானம் ஒரு குடியிருப்புப் பகுதியில் மோதி, தீப்பிடித்து எரிந்தது. மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“இந்தத் துயரச் சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிலான துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது” என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெளிவரும் படங்கள் இந்த விபத்து எவ்வளவு பெரியது என்பதைக் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விமானத்தில் பணியாளர்கள் உள்பட 242 பேர் இருந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பிறகு அப்பகுதியில் கரும்புகை காணப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது.

பட மூலாதாரம், BBC/Tejas Vaidya

படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதியில் மீட்பு படையினர்.

பட மூலாதாரம், ANI Via CISF

படக்குறிப்பு, விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BBC/Tejas Vaidya

படக்குறிப்பு, விமானம் ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீட்புப் பணியில் ஒரு தீயணைப்புப் படை வீரர்.

பட மூலாதாரம், BBC/Tejas Vaidya

படக்குறிப்பு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, விமான பாகங்கள் கட்டடங்கள் மீது மோதி விழும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கட்டடத்தின் கூரையில் விமானத்தின் பின்புறப் பகுதி.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, விபத்துக்குப் பிறகு, அங்கு தீ விபத்து ஏற்பட்டது. சேதத்தை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு