ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது – என்ன நிலவரம்?

பட மூலாதாரம், UGC

12 ஜூன் 2025, 08:57 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் செல்லப் புறப்பட்ட AI171 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

இருப்பினும் வெளியாகியுள்ள படங்களில் விமானத்தில் நெருப்பு எரிவதையும் புகை எழும்புவதையும் காணலாம். விரிவான தகவல்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

ஆமதாபாத் நான்காவது போலீஸ் மண்டல துணை காவல் ஆணையர் கண்ணன் தேசாய், விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியுள்ளார்

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. அது எந்த வகையான விமானம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

“விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன,” என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட் ரேடார் 24’, “ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது,” என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது.

ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் 787-8 ட்ரீம்லைனர் ஆகும்.

ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு