Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி – ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி37 நிமிடங்களுக்கு முன்னர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்” என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியுடன் சச்சின் (2019)ஜனவரி 2, 2009 அன்று ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) உடன் இணைந்து, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பேரைச் சேர்த்து, இதுவரை இந்தப் பட்டியலில் 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ சேர்க்கப்படுபவர்களுக்கு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொப்பி (Cap) வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த கிரிக்கெட் வீரர் அல்லது வீராங்கனை உயிரோடு இல்லையென்றால், அவர்களின் குடும்பத்தாரிடம் இந்த தொப்பி வழங்கப்படும்.
இந்த ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ சேர்க்கப்படுபவதற்கான அடிப்படை தகுதி என்பது, அந்த வீரர் அல்லது வீராங்கனையின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும்.
தோனியைப் பொறுத்தவரை, 2019 (ஜுலை 10) ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டி. 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.2025 வருடத்திற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்,
எம்.எஸ். தோனி – இந்தியா
கிரயெம் ஸ்மித்- தென்னாப்பிரிக்கா
ஹாசிம் அம்லா- தென்னாப்பிரிக்கா
மேத்யூ ஹைடன்- ஆஸ்திரேலியா
டேனியல் வெட்டோரி- நியூஸிலாந்து
வீராங்கனைகள்:
சனா மிர்- பாகிஸ்தான்
சாரா டெய்லர்- இங்கிலாந்து.
இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா, “ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் மூலம், கிரிக்கெட்டின் பாரம்பரியத்திற்கு பங்களித்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த கிரிக்கெட் வீரர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். இந்த ஆண்டு, சிறந்த ஏழு நபர்களை இந்த மதிப்புமிக்க குழுவில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐசிசி சார்பாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியர்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சுனில் கவாஸ்கருக்கு ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியை வழங்கும் கபில் தேவ்இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்ட வருடமான 2009இல் சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் பேடியின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
அதன் பிறகு 2010இல், கபில் தேவின் பெயர் சேர்க்கப்பட்டது.
2015இல் அனில் கும்ப்ளேவின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், 2018இல் ராகுல் டிராவிட்டும், 2019இல் சச்சின் டெண்டுல்கரும் இதில் சேர்க்கப்பட்டனர்.
2021இல் வினோ மன்காட், 2023இல் வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் தோனி.
இவர்கள் தவிர்த்து டயானா எடுல்ஜி, நீது டேவிட், ஆகிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்களும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான தோனி, 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். அதன் பிறகு 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது.
கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பேசிய தோனி, “தலைமுறைகளைக் கடந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் எனது பெயரும் இடப்பெற்றது மிகப்பெரிய கௌரவம். வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் என் பெயரும் நினைவுகூரப்படும் என்பது ஒரு அற்புதமான உணர்வு.” என்று கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு