Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் நேற்றைய தினம் கதிரைகளை தக்க வைக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க தமிழரசுக்கட்சி தேசிய மக்கள் சக்தி பக்கம் சாயலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக யாழ் மாநகர சபையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்; பதவிகளுக்கு பேரம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்.மாநகரசபையில் தமிழ் தேசிய பேரவையிடம் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடம் 4 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 16 ஆசனங்கள் கைவசம் இருக்கின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் 13 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் யாராவது ஆதரவு வழங்கினால் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயார் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் யாழ்.மாநகர சபையில் தமது ஆதரவு பொம்மை முதல்வர் ஒருவரை கதிரையிலமர்த்த தேசிய மக்கள் சக்தி திட்டமிடுகின்றது.
தென்னிலங்கை அரசை அனுசரித்து செல்லக்கூடிய தமிழரசுக்கட்சி வசம் யாழ் மாநகர சபை செல்வதை ஊக்குவிக்க வாக்கெடுப்பு ஒன்று நடக்குமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியானது தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.