Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம்காணொளிக் குறிப்பு, ‘சமோசா எங்கள் குடும்பத்தின் தலைவிதியை மாற்றி உள்ளது’- கனடாவில் சமோசா தொழில் செய்யும் இந்தியர்வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தக் காணொளியில் வரும் கதை இந்திய சமோசாவைப் பற்றியது. கனடாவில் வசிக்கும் ஹர்பால் சிங் சந்து, இதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே மாற்றி இருக்கிறார். சந்துவின் சமோசா கனடா மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலும் நன்கு பிரபலமானது.
ஹர்பால் சிங் சந்து இந்தியாவில் வழக்கறிஞராக இருந்தார். கனடாவுக்கு குடிபெயர்ந்த பின் 1989-இல் சமோசா தொழிலைத் தொடங்கினார்.
“நாங்கள் இந்த தொழிலைச் செய்கிறோம் என்பதை என் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இது என்ன மாதிரியான சாதனை? நான் படிக்க வைத்து வழக்கறிஞர் ஆக்கினேன். ஆனால் இங்கு நீ பகோடாக்களை விற்றுக்கொண்டு இருக்கிறாய் என்று அவர் கூறினார். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு என் தந்தை எங்களையும் எங்கள் தொழிலையும் புரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.” என்கிறார் ஹர்பால் சிங்.
பஞ்சாபிகள் மட்டும் அல்லாமல் பிற மக்களும் எங்கள் சமோசாக்களை விரும்புகின்றனர் என்று கூறும் ஹர்பால் சிங், “கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இவற்றை விற்கிறோம். இந்த நாடுகளில் அதிக விற்பனை உள்ளது. மக்கள் சமோசாக்களை விரும்புகிறார்கள்” என்கிறார்.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு