Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
29 மே 2025, 14:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
முலான்பூரில் இன்று (மே 29) நடக்கும் ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணியில் நுவான் துசாரவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் களமிறங்கியுள்ளார். தசைப்பிடிப்பு காரணமாக டிம் டேவிட் களமிறங்கவில்லை, அவருக்குப் பதிலாக லியாம் லிவிங்ஸ்டோன் களமிறங்கியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் யான்செனுக்கு பதிலாக அஸ்மத்துல்லா ஓமர்சாய், கெயில் ஜேமிஸன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் திணறல்
பஞ்சாப் அணி பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
யஷ் தயால் வீசிய முதல் ஓவரிலேயே 2வது பந்தில் பிரியன்ஸ் ஆர்யா 7 ரன்னில் குர்னல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பிரப்சிம்ரன் அதிரடியாக புவனேஷ்வர் ஓவரில் 2 பவுண்டரி அடித்து விக்கெட் கீப்பர் ஜிதேஷிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்னில் வெளியேறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரப்சிம்ரன் அதிரடியாக புவனேஷ்வர் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஹேசல்வுட் 4வது ஓவரை வீச வந்தபோது, ஜோஸ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் இருவரும் களத்தில் இருந்தனர்.
ஷ்ரேயாஸ் அய்யரை ஏற்கெனவே 3 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ள ஹேசல்வுட் இந்த முறையும் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினார். ஹேசல்வுட் வீசிய 4வது பந்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர்களில் ரஸலுக்கு (5) அடுத்தார்போல் 4 முறை ஹேசல்வுட் ஆட்டமிழக்கச்செய்துள்ளார்.
ஐந்து ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோஸ் இங்கிலிஸ், நேபல் வதேரா களத்தில் உள்ளனர்.
10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்த பிறகு ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் ஜோஸ் இங்கிலிஸும் (4) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹேசல்வுட் தனது இரு ஓவர்களிலும் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து யஷ் தயால் வீசிய 7வது ஓவரில் பந்தை அடிக்க முயன்றபோது இன்சைட் எட்ஜ் எடுத்து க்ளீன் போல்டாகி நேஹல் வதேரா 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பிறகு சூயஷ் ஷர்மா பந்துவீச அழைக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சாளர் சூயஸ் ஷர்மா வீசிய 2வது பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று சஷாங் சிங் 3 ரன்னில் கிளீன் போல்டானார்.
அடுத்து வந்த முசீர் கான் அதே ஓவரின் 5வது பந்தில் கால்காப்பில் வாங்கி சூயஷ் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார். 9 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் என்று தடுமாறியது.
ஸ்டாய்னிஷ் மட்டுமே நம்பிக்கை தரக்கூடிய நிலையில் ஆடி வந்தார். ஆனால் விரைவாகவே சூயஷ் ஷர்மா வீசிய 11வது ஓவரில் ஸ்டாய்னிஷ் க்ளீன் போல்டாகி 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு