காணொளிக் குறிப்பு, பூஸ்டர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்9வது முறை வெடித்த ஸ்டார்ஷிப் ராக்கெட் – செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் நிலை என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தொழிலதிபர் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 9வது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸில் உள்ள தளத்திலிருந்து ஏவியது. கடந்த கால சோதனைகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெற்றிகளை இது எட்டியுள்ள போதிலும், புவி சுற்று வட்டப்பாதையை தாண்டும் முன்னரே இந்த விண் கலனில் கசிவு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்தது.

இந்த முயற்சி ஸ்டார்ஷிப்பின் நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறுகிறது. செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸின் நீண்டகால செயல் திட்டத்திற்கு இந்த சோதனை முக்கியமானதாகும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு