Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ் . மாவட்ட மேலதிக செயலர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் போராசிரியர் கே. பி. எல். சந்திரலால், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. தமித குமாரசிங்ஹமற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலந்த சபுமனகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் முன்னறிவிக்கப்பட்ட உற்பத்தி கலவை மற்றும் செலவுகள், எரிபொருள் செலவுகள், பரிமாற்றம் மற்றும் விநியோகச் செலவுகள், நிதிச் செலவுகள், 2024 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான வருமான உபரி, 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டின் நிதி இழப்பு, முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு முறை, கட்டண சமர்ப்பிப்பு குறித்த ஆணைக்குழுவின் ஆராய்வு மற்றும் முன்னேற்றத்திற்கான பங்குதாரர் திட்டங்கள் தொடர்பாக 09 தலைப்புக்களின் கீழ் சமர்ப்பிப்புக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வேலணை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், வர்த்தக பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் (நிர்வாகம்), கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.