யாழ் . மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகரவிற்கு மாவட்ட செயலர் எடுத்து கூறியுள்ளார்.

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து  கலந்துரையாடினார்.

அதன் போது, யாழ்  மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும்  தேவைப்பாடுகள் சார் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி   , சுற்றுலாத்துறை மேம்பாடு , தாழையடி குடிநீர்த்திட்டம் , தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள், வங்கிக் கடன் முறைமை ,தொழில் தேடுவோருக்கான  வேலைத்திட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில் முயற்சி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை இனங்காணல்,நிதி சாா்ந்த விடயங்களை வங்கிகளுடன் கலந்துரையாடல் மற்றும்  தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில் முயற்சி அபிவிருத்தி மேம்பாடு, ஏற்றுமதி , பல்கலைக்கழகங்களில் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல்,  பாடசாலைகளில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல்  போன்ற விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில்  பிரதிப்பணிப்பாளர்  வசந்த சேனா நாயக்க, உதவிப்பணிப்பாளர்  சசிகதிமெல்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்