Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘விண்வெளியில் அணு ஆயுதப் போர்’ – அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “கோல்டன் டோம்” ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளதுஎழுதியவர், கீலீ ங் பதவி, பிபிசி செய்திகள்35 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்காவின் எதிர்கால “கோல்டன் டோம்” ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது. இந்த முயற்சி “விண்வெளியை அணு ஆயுதப் போர் களமாக மாற்றும் சாத்தியங்கள் உள்ளதாக” வட கொரியா கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்காவிற்கு “அடுத்த தலைமுறை” வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக (cruise missiles – தானாகவே வழிநடத்தி செல்லக் கூடியவை) ஏவுகணைகளும் அடங்கும்.
வட கொரிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் திட்டத்தை “சுயநீதி மற்றும் ஆணவத்தின் உச்சம்” என்று சாடியதாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“விண்வெளியை ராணுவமயமாக்க… எதுவும் செய்யத் தயாராக” இருப்பதாக அமெரிக்காவை வட கொரியா குற்றம் சாட்டியது, மேலும் இந்தத் திட்டம் “உலகளாவிய அணு ஆயுத மற்றும் விண்வெளி ஆயுதப் போட்டியை” தூண்டக்கூடும் என்றும் எச்சரித்தது.
வட கொரியா, அமெரிக்காவை எதிரியாகக் கருதுகிறது, அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளை கண்டித்து வருகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவின் கோல்டன் டோம், வட கொரியாவின் அணு ஆயுதக் கிடங்கை “கணிசமாக பலவீனப்படுத்தக்கூடிய” ஒரு அச்சுறுத்தலாக வட கொரியா கருதுகிறது என்று கொரியா தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின், AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“அமெரிக்கா தனது புதிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை நிறைவு செய்தால், அதை எதிர்க்க அல்லது ஊடுருவுவதற்கு வட கொரியா மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டில், தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை வட கொரியா இயற்றியது, மேலும் அது அண்மை ஆண்டுகளில் பல்வேறு பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைப்பர்சோனிக் (ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் ) திறனுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வட கொரியா கூறியது, இது “பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளர்களையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்” என்றும் அந்நாடு கூறியது.
அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டத்தை விமர்சிக்கும் சீனாவுடன் வட கொரியாவும் இணைகிறது. கடந்த வாரம் கோல்டன் டோம் பற்றி “தீவிரமாக கவலை கொண்டுள்ளது” என்று சீனா கூறியது, இது “வலுவான தாக்குதல் விளைவுகளைக்” கொண்டுள்ளது என்று கூறியது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையைப் பின்பற்றும் அமெரிக்கா, தனக்கான முழுமையான பாதுகாப்பைத் தேடுவதில் வெறித்தனமாக உள்ளது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. “இது அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் சமரசம் செய்யக்கூடாது என்ற கொள்கையை மீறுகிறது மற்றும் உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.”
அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவது அவசியம் என்று பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள், ஆனால் சிலர் கோல்டன் டோமை உருவாக்கும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியிலான சவால்களுடன் அரசியல் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் கோல்டன் டோம் தயாரிப்பு மொத்த செலவு, அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும்.
புதிய பட்ஜெட் மசோதாவில் முதல்கட்டமாக $25 பில்லியன் (£18.7 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பல தசாப்தங்களாக செலவிடப்பட்ட தொகையைவிட 20 மடங்கு செலவாகும் என்று அமெரிக்க அரசு மதிப்பிட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு