லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து   புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான  விமல் வீரவன்ச  குறிப்பிட்டுள்ளாா்.

தொலைக்காட்சி நேர்காணலின் போது  இதனைத் தொிவித்த   வீரவன்ச, இந்தப் பட்டியலில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளாா். .

இந்தப் பட்டியல் தொடர்பான நடவடிக்கை குறித்த வழிமுறைகளைப் பெறுவதற்காக லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு தொடர்ந்து  செல்வதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

தானும் அந்தப் பட்டியலில் இருப்பதாகவும்  காஞ்சன விஜேசேகர மற்றும் ரமேஷ் பத்திரனேவும் இருக்கின்றனர் எனவும்  மஹிந்தானந்த அளுத்கமகேவும் இதுபோல் கைது செய்யப்பட்டார் எனவும் தொிவித்துள்ளாா். அமைச்சகங்களின் கீழ் உள்ள துறைகளால் நடத்தப்பட்ட விடயங்களுக்காக இந்தக் கைதுகள் நடைபெறுகின்கின்றன.  இந்த சம்பவங்கள் தொடர்பாக அமைச்சகங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்் எனவும்  .  வீரவன்ச  தொிவித்துள்ளாா்

மே மாதம் நடைபெறற  உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னா் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர்களைக் கைது செய்யாததால்தான்   தேர்தலில் வாக்குகளை இழந்ததாக அரசாங்கம் கருதுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளா்ா.

தான்  வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சராக இருந்த காலம் தொடர்பான ஒரு விவகாரம் தொடர்பாக லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து    புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் முன்  முன்னிலையாகுமாறு தான்  அழைக்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் வீரவன்ச,  தெரிவித்துள்ளாா்.