கொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 24 ஆம் திகதி நபரொருவருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சார்ஜன்ட் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ – மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஆண் மற்றும் பெண்ணொருவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பிலையே பொலிஸ் சார்ஜன்ட்  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.