Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிளே ஆஃப்பில் முதலிடம் யாருக்கு? கடைசி போட்டி வரையிலும் முடியாத பரபரப்பு
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக59 நிமிடங்களுக்கு முன்னர்
2025 ஐபிஎல் சீசன் போன்று இதற்கு முன் எந்த சீசனும் கடைசி லீக் போட்டிவரை ப்ளே ஆஃப் சுற்றில் யாருடன் யார் மோதுவார்கள் என்பது தெரியாமல் இருந்தது இல்லை.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வாகியும், இன்னும் எந்த அணி யாருடன் மோதுவது என்பது முடிவாகாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது.
ப்ளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தேர்வாகியுள்ளன. ஆனால், இன்னும் முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் சுற்று, 2வது தகுதிச் சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுவது தெரியாததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடக்கும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மட்டுமின்றி, நாளை நடக்கும் ஆர்சிபி மற்றும் லக்னெள அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டம்வரை ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் யாருடன் மோதுவது என்பது முடிவு செய்ய முடியாததாகவே இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒருவேளை இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி வென்றால், 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்துக்கு முன்னேறும்.புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது. கடைசி இரு லீக் ஆட்டங்களில் குஜராத் தோல்வி அடையாமல் இருந்திருந்தால் இந்த அளவு குழப்பம், எதிர்பார்ப்பு இருந்திருக்காது, ஆனால் குஜராத்தின் அடுத்தடுத்த இரு தோல்விகள் புள்ளிப்பட்டியலில் குழப்பத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதேபோல பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் 17 புள்ளிகளுடனும் உள்ளன, இதில் பஞ்சாப் அணி சற்று உயர்வாக ரன்ரேட்டை வைத்திருக்கிறது. இரு அணிகளும் தங்களின் 13வது லீக் ஆட்டத்தில் தோற்றதால் கடைசி லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கியுள்ளன.
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வென்றாலும், ஆர்சிபி ஆட்டம் முடியும்வரை காத்திருக்க வேண்டும். ஒருவேளை பஞ்சாபும் வென்று, ஆர்சிபியும் வென்றால் இரு அணிகளும் 19 புள்ளிகள் பெறும். அப்போது நிகரரன்ரேட் அடிப்படையில்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முதல், இரண்டாம் இடங்கள் முடிவாகும். ஆதலால், ஆர்சிபி ஆட்டம் முடியும்வரை ப்ளேஆஃப் சுற்றில் எந்த இடம் எந்தெந்த அணிகளுக்கு என உறுதியாகக் கூறிவிட முடியாது.
இதனால்தான் ஆர்சிபி, மும்பை, பஞ்சாப் அணிகள் மோதும் கடைசி இரு லீக் ஆட்டங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . அது எப்படி எனப் பார்க்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது.மும்பை Vs பஞ்சாப்
குஜராத் அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றில் முதலிடத்தைப் பிடித்து முடித்துவிட்டது. கடைசி இரு லீக் ஆட்டத்தில் லக்னெள, சிஎஸ்கே அணியிடம் தோற்று நிகரரன் ரேட்டில் பஞ்சாப்புக்கும் குறைவாக 0.309 என வைத்துள்ளது.
இன்று நடக்கும் மும்பை, பஞ்சாப் இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றால், 19 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு செல்லும். மும்பை அணி 16 புள்ளிகளுடன் கடைசி இடம் என்பது உறுதியாகும். ஆனால், குஜராத் அணியின் இடம் முடிவாகாது.
ஏனென்றால், நாளை நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணி லக்னெளவை வென்றுவிட்டால் 19 புள்ளிகள் பெறும். பஞ்சாப் அணியைவிட நிகரரன்ரேட்டில் உயர்வாக இருந்தால் ஆர்சிபி முதலிடத்தைக்கூட பிடிக்கலாம். ஒருவேளை நிகரரன்ரேட் குறைவாக இருந்தால் 2வது இடத்தை ஆர்சிபி பிடிக்கும், குஜராத் அணிக்கு 3வது இடம் கிடைக்கும். ஒருவேளை ஆர்சிபி தோற்றால், குஜராத் 2வது இடத்தையும், ஆர்சிபி 3வது இடத்தையும் பிடிக்கும்.
ஒருவேளை இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி வென்றால், 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்துக்கு முன்னேறும்.
நாளை நடக்கும் கடைசி லீக்கில் ஆர்சிபி அணி வென்றாலே 19 புள்ளிகளுடன் மும்பையை 2வது இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறும். மும்பை அணி 2வது இடத்தையும், குஜராத் அணி 3வது இடத்தையும், பஞ்சாப் 4வது இடத்தையும் பிடிக்க வேண்டியதிருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இன்று நடக்கும் மும்பை, பஞ்சாப் இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றால், 19 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு செல்லும்பஞ்சாப் நிலைமை எப்படி
பஞ்சாப் அணி 17 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 0.327 என குஜராத், ஆர்சிபி அணிகளைவிட சற்று உயர்வாக இருக்கிறது. இப்போதைய நிலையில் பஞ்சாப் அணி முதலிடத்துக்கு முன்னேற மும்பை அணியை வீழ்த்தியே ஆக வேண்டும். மும்பையை தோற்கடித்தால் பஞ்சாப் அணி 19 புள்ளிகளுடன் வலுவான நிகரரன்ரேட்டில் முதலிடத்துக்கு செல்லும்.
நாளை நடக்கும் ஆர்சிபி, லக்னெள ஆட்டத்தில் ஒருவேளை ஆர்சிபி தோற்றால், ஆர்சிபி 3வது இடத்தையும், மும்பை அணி 16 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடிக்கும். குஜராத் அணி 2வது இடத்தைப் பிடிக்கும்.
ஒருவேளை லக்னெள அணியை ஆர்சிபி அணி வென்றுவிட்டால், 19 புள்ளிகள் பெறும். ஆனால், நிகர ரன்ரேட் பஞ்சாப் அணியைவிட குறைவாக இருந்தால் 2வது இடத்தைப் பிடிக்கும், பஞ்சாப் அணியைவிட ஆர்சிபி நிகர ரன்ரேட் அதிகமாக இருந்தால் ஆர்சிபி முதலிடத்தையும், பஞ்சாப் அணி 2வது இடத்தையும் பிடிக்கும்.
பஞ்சாப் அணி இன்று மும்பையிடம் தோற்கும் பட்சத்தில் 3வது இடத்துக்கு செல்லும், நாளை நடக்கும் ஆர்சிபி, லக்னெள ஆட்டத்தில் ஆர்சிபி தோற்றால், நிகரரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது, 4வது இடம் முடிவாகும். ஒருவேளை, ஆர்சிபி வென்றால், முதலிடத்தையும், மும்பை அணி 18 புள்ளிகளுடன் வலுவான ரன்ரேட்டுடன் 2வது இடத்தையும், குஜராத் 3வது இடத்தையும், பஞ்சாப் 4வது இடத்தையும் பிடிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
மும்பைக்கு முதலிடம் கிடைக்குமா?
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் தற்போது 16 புள்ளிகளுடன் இருந்து 18 புள்ளிகளுக்கு முன்னேறும், வலுவான 1.292 ரன்ரேட்டில் இருப்பதால், முதலிடத்துக்கு முன்னேறும்.
ஆனால், நாளை நடக்கும் ஆர்சிபி, லக்னெள இடையிலான ஆட்டத்தில் ஆர்சிபி தோற்றால் மும்பை முதலிடத்தை தக்கவைக்கும். ஒருவேளை ஆர்சிபி சாதாரண வெற்றி பெற்றாலே 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து, மும்பை 2வது இடத்துக்கு செல்லும். மும்பை முதலிடம் பிடிக்க இன்று வெற்றியும், நாளை ஆர்சிபி தோற்கவும் வேண்டும்.
ஒருவேளை மும்பை அணி இன்று நடக்கும் ஆட்டத்தில் தோற்கும்பட்சத்தில் நிச்சயமாக 4வது இடம்தான் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ப்ளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தேர்வாகியுள்ளன.ஆர்சிபிக்கு எந்த இடம் கிடைக்கும்
ஆர்சிபி அணி தற்போது 17 புள்ளிகளுடன், 0.255 ரன்ரேட்டில் பஞ்சாப், குஜராத் அணியைவிடக் குறைவாக இருக்கிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால்தான் அந்த அணிக்கு முதலிடமா அல்லது 2வது இடமா என்பது முடிவாகும்.
அதாவது இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை பஞ்சாப் அணி வென்றுவிட்டால் 19 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். நாளை நடக்கும் கடைசி லீக்கில் பஞ்சாப் ரன்ரேட்டை முறியடிக்க எத்தனை ஓவர்களில் வெல்ல வேண்டும், எவ்வளவு ரன்கள் சேர்க்க வேண்டும் என்பது ஆர்சிபிக்கு தெரிந்துவிடும், அதன்படி குறிப்பிட்ட விதிக்குள் ஆர்சிபி வென்றால் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.
ஒருவேளை ஆர்சிபி நாளை வெற்றி பெற்றும், முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியின் ரன்ரேட்டை முறியடிக்க முடியாவிட்டால் 19 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும்.
ஒருவேளை பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வி அடைந்தால், மும்பை அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். ஆனால், நாளை நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணியை சாதாரண வெற்றி பெற்றாலே ஆர்சிபி அணி 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும்.
அதேசமயம், ஆர்சிபி அணி நாளைய ஆட்டத்தில் லக்னெளவிடம் தோல்வி அடைந்தால், அதன் நிகர ரன்ரேட் மிகவும் பின்தங்கி, பஞ்சாப் அணியைவிட கீழே இறங்கி, 4வது இடத்துக்கு செல்லக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
இன்றைய ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
இடம்: ஜெய்பூர்
நேரம்: இரவு 7.30
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs லக்னெள
நாள் – மே 27
இடம் – லக்னெள
நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)
சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)
சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)
நீலத் தொப்பி
நூர் அகமது(சிஎஸ்கே) 24 விக்கெட்டுகள்(14போட்டிகள்)
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 23 விக்கெட்டுகள்(14 போட்டிகள்)
டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு