Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் இடி மின்னலோடு இணைந்ததாகவே இந்த மழை கிடைக்கும்.
அதேவேளை எதிர்வரும் 27ஆம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் பங்களாதேஸ்க்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் கிடையாது.
ஆனாலும் இந்த நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.